ரூ. 90 லட்சம் மோசடி - பிரபல நடிகை போலீஸில் புகார்

kutty pathmini
Last Modified ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (17:39 IST)
தமிழ் திரையுலகில் நடிகையாகவும், பிரபல தொலைக்காட்சி தொடர்களை தயாரித்துவருபவர் நடிகை குட்டிபத்மினி. இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். 
இதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :
 
கடந்த 2016ஆம் ஆண்டுமுதல் நான் கிரீடா ஸ்போர்ட்ஸ் பவுண்டேசன் என்ற அமைப்பை நடத்திவருகிறேன். இந்த அமைப்பில் சந்தோஷ் கோபி, சண்முககுமார் ஆகியோர் நிர்வாக இயக்குநராக இருந்தனர். 
 
இதனையடுத்து சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தை குத்தகைக்கு எடுத்து மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க முடிவு செய்து இதற்கான பணியையும் ஆரம்பித்தேன். ஆனால் இயக்குநர்களான சந்தோஷ் கோபி, சண்முககுமார் என்னை ஏமாற்றி மோசடி செய்துதுள்ளனர். 
 
மேலும் எனது கம்பெனிக்குவரும் செக்குகளை அவர்கள் தொடங்கிய கம்பெனிக்கு மாற்றி என் கம்பெனிக்கு ரூ. 90 லட்சம் அளவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். என்று தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :