வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 2 டிசம்பர் 2020 (07:58 IST)

விவசாயிகள் போராட்டம்: முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி!

விவசாயிகள் போராட்டம்: முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி!
டெல்லியில் கடந்த ஒரு வாரமாக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டத்திற்கு விவசாய அமைப்புகள் அனைத்தும் ஆதரவு அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும் என மத்திய அரசு நேற்று கேட்டுக்கொண்டது. இதனை அடுத்து விவசாய சங்க பிரதிநிதிகள் நேற்று டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்
 
டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து மீண்டும் டிசம்பர் 3ஆம் தேதி அதாவது நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்றும் விவசாயிகளின் போராட்டத்திற்கு முடிவு கிடைக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்