வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 டிசம்பர் 2020 (19:36 IST)

விவசாயிகள் போராட்டம்: கனடா பிரதமருக்கு இந்தியா கண்டனம்!

வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த சில நாட்களாக விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் சங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அனேகமாக நாளை அல்லது நாளை மறுநாள் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் உலக அளவில் கவனத்தை பெற்ற இந்தப் போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் ’இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் பற்றி செய்திகள் கவலை அளிக்கிறது என்றும், அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும் என்றும் தெரிவித்திருந்தார் 
 
கனடா பிரதமரின் இந்த அறிவிப்புக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய விவசாயிகள் குறித்து கனடா தலைவர்கள் தவறான தகவலை தெரிவித்துள்ளனர் என்றும் ஜனநாயக நாட்டில் உள் விவகாரத்தில் வேறொரு நாட்டின் கருத்து தெரிவிப்பது தேவையற்ற இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது