திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 டிசம்பர் 2020 (19:36 IST)

பாமக போராட்டம்: அன்புமணி உள்ளிட்ட 850 பா.ம.க.வினர் மீது வழக்கு!

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி இன்று தமிழகத்தில் பாமகவினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் ஒரு சில இடங்களில் வன்முறையாக மாறியது என்பதும் ரயில் மற்றும் பேருந்துகளை மறித்து போராட்டம் செய்தவர்கள் ரயில்கள் மீது கல்லெறிந்த சம்பவங்களின் வீடியோ வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி தடையை மீறி இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய அன்புமணி ராமதாஸ், ஜிகே மணி, ஏகே மூர்த்தி உள்ளிட்ட பாமகவினர் 850 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அழைப்பின் பேரில் அன்புமணி ராமதாஸ் அவரை நேரில் சந்தித்து தங்களுடைய கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது