புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 1 டிசம்பர் 2020 (17:51 IST)

என் உடல் மட்டும்தான் தைலாபுரத்தில் உள்ளது – பாமக போராட்டம் குறித்து ராமதாஸ் கருத்து!

பாமக நிறுவனர் ராமதாஸ் பாமக நடத்தும் போராட்டம் குறித்து சமூகவலைதளம் மூலமாக பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வன்னியர் சமூகத்திற்கு 20% இடஒதுக்கீடு வழங்க கோரி பாமகவினர் சென்னையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் தண்டவாளத்தில் சென்ற ரயிலை பாமகவினர் கல்லால் அடித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாமகவினர் போராட்டத்தால் சென்னையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் கீழ்ப்பாக்கம் அருகே போக்குவரத்தை இடையூறு செய்யும் விதமாக இளைஞர்கள் சிலர் நடந்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து சமூகவலைதளம் குறித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் ‘என் உடல் மட்டும் தான் தைலாபுரத்தில் உள்ளது.. உயிரும், உள்ளமும் சென்னை போராட்டக்களத்தில் தான் உள்ளன.’ எனத் தெரிவித்துள்ளார்.