குறைவாக பேசி, அதிகமாக செய்தார்: மன்மோகன் சிங்கிற்கு விஜய் இரங்கல்..!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு காலமான நிலையில், அவருடைய மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு தனது சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது இரங்கல் பகுதியில் கூறி இருப்பதாவது: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மகத்தான ஞானம், மற்றும் நேர்மையுடன் இந்தியாவை வழிநடத்தியவர். குறைவாக பேசி அதிகமாக செய்தவர்.
இந்திய பொருளாதாரத்திற்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பு மற்றும் தேசத்திற்கு அவர் செய்த உன்னதமான சேவைகளால் என்றென்றும் போற்றப்படுவார் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கடினமான நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, ஆதரவாளருக்கு மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
Edited by Siva