திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (13:21 IST)

500 குழுக்கள் இருக்கோம்.. 32 பேருக்குதான் அழைப்பு! – பேச்சுவார்த்தையை மறுத்த விவசாயிகள்!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் இன்று மத்திய வேளாண் துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடந்த இருந்த நிலையில் விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த விவசாய மசோதாவிற்கு எதிராக பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் அவர்கள் விடாமல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் விக்யான் பவனில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் டோமர் விவசாய சங்கங்களிடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். இதற்காக விவசாய குழுக்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் டெல்லியில் 500க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அதில் 32 குழுக்களின் தலைவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற அனைவருக்கும் அழைப்பு விடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு உடன்பட முடியும் என விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் இன்று பேச்சுவார்த்தை நடத்துவதில் தாமதம் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. இதனால் போராட்டம் மேலும் சில நாட்கள் நீடிக்கலாம் என கூறப்படுகிறது.