செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 14 டிசம்பர் 2020 (10:17 IST)

போலி சான்றிதழ்: மாணவிக்கு உதவிய கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளருக்கு வலைவீச்சு!

மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வின்போது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் போலி சான்றிதழ் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீதும் அவரது தந்தை மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது
 
இந்த நிலையில் போலி சான்றிதழ் தொடர்பாக அந்த மாணவிக்கு உதவிய கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளரை போலீஸ் தேடி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பரமக்குடியை சேர்ந்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் ஒருவர் தான் ராமநாதபுரம் மாவட்ட மாணவிக்கு போலி சான்றிதழ் தயாரித்ததாக புகார் எழுந்துள்ளது
 
இதனை அடுத்து அந்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். நீட் தேர்வு மதிப்பெண் பட்டியல் முறையீடு செய்து சான்றிதழ் தயாரித்த அந்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் விரைவில் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் போலி சான்றிதழை தடயவியல் துறைக்கு அனுப்பி விசாரணை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது