சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யும் என்றும், ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, சென்னையின் முக்கிய பகுதிகள் மற்றும் டெல்டா பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 28ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அத்தியாவசியமான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Edited by Mahendran