தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் திறப்பு: மாணவ மாணவிகளுக்கான நிபந்தனைகள்!

college students
தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் திறப்பு:
siva| Last Updated: புதன், 2 டிசம்பர் 2020 (07:49 IST)
கடந்த 8 மாதங்களாக தமிழகத்தில் கல்லூரிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் ஒருசில வகுப்புகளுக்கான கல்லூரிகள் மற்றும் திறக்கப்படுகின்றன

கடந்த சில மாதங்களாக ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில் இன்று முதல் ஆராய்ச்சி மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு மட்டும் கல்லூரிகளில் வகுப்புகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்வியை கருத்தில் கொண்டு கல்லூரிகள் திறக்கப்படுவதாகவும் ஆனால் அதே நேரத்தில் மாணவ-மாணவிகள் தனிமனித இடைவெளி முககவசம் சானிடைசர் உபயோகித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற வேண்டும் என்றும் உயர் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது

மேலும் டிசம்பர் ஏழாம் தேதி முதல் இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் கல்லூரிகள் திறக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :