மகாராஷ்டிரா முதல்வராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்.. ஆளுநருடன் சந்திப்பு!
பாஜக கூட்டணியில் முதலமைச்சர் பதவி தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்பட்ட நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோர ஆளுநருடன் தேவேந்திர பட்னாவிஸ் சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்றது. மொத்தம் 281 தொகுதிகளில் 230 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பாஜக தனிப்பெரும் கட்சியாக 130 தொகுதிகள் பெற்ற பாஜகவில் இருந்து முதலமைச்சர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்பட்டது. தற்போதைய முதல்வர் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து வந்த அஜித் பவார் ஆகிய இருவரும் முதல்வர் பதவிக்காக விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்பார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனை உறுதி செய்யும் விதமாக, ஃபட்னாவிஸ் மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரியதாக கூறப்படுகிறது.
முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க ஷிண்டே கடும் எதிர்ப்பு தெரிவித்ததையும் மீறி தேவேந்திர பட்னாவிஸ் அவர்களை முதல்வராக பாஜக தீவிர முயற்சி செய்து வருவதாக கூறப்படுவதால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Edited by Mahendran