வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (13:24 IST)

நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022; நகராட்சி, மாநகராட்சி முன்னிலை நிலவரம்!

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி வாரியாக முன்னிலை விவரங்கள் வெளியாகியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக, பாஜக, மநீம, நாதக, விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. தற்போது உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி, மாநகராட்சிகளில் உள்ள மொத்தம் 1373 இடங்களில் திமுக கூட்டணி 464 இடங்களிலும், அதிமுக 59 இடங்களிலும், மற்றவை 27 இடங்களிலும் முன்னிலை மற்றும் வெற்றியில் உள்ளன.

நகராட்சியை பொறுத்தவரை மொத்தம் உள்ள 3,842 வார்டுகளில் 2019 பகுதிகளில் திமுக கூட்டணியும், 513ல் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளும், மற்றவை 168 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.

பேரூராட்சியில் 7,604 வார்டுகளுக்கு 4,909 வார்டுகளின் முன்னிலை மற்றும் வெற்றி விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி திமுக 3,694 இடங்களிலும், அதிமுக 779 இடங்களிலும், மற்றவை 436 இடங்களிலும் முன்னிலை மற்றும் வெற்றியில் உள்ளன.