1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (13:06 IST)

மீண்டும் ஒரே ஒரு ஓட்டு வாங்கிய பாஜக வேட்பாளர்: அவருடைய ஓட்டு மட்டுமே பதிவு

ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது ஒரே ஒரு ஓட்டு வாங்கிய பாஜக வேட்பாளர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஏற்பட்டது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக வேட்பாளர் ஒருவர் ஒரே ஒரு வாக்கை பெற்றுள்ளார்
 
 பவானிசாகர் பேரூராட்சியில் 4வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராஜேந்திரன் என்பவர் தீவிரமாக பிரசாரம் செய்தார். ஆனால் அந்த தொகுதியில் அவருக்கு ஒரே ஒரு மட்டுமே கிடைத்தது. அதுவும் அவர் போட்ட ஓட்டு என்று தெரிய வருகிறது 
 
பாஜக வேட்பாளரின் ஓட்டை தவிர அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் உறவினர்களும் கூட அவருக்கு வாக்களிக்க வில்லை என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
இதனை அடுத்து மீண்டும் ஒத்த ஓட்டு பாஜக என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது