ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (13:02 IST)

ஹிஜாப் பிரச்சினை எழுந்த வார்டில் பாஜகவுக்கு 10 ஓட்டு! – வெற்றி பெற்றது யார்?

நகர்புற உள்ளாட்சி தேர்தலின்போது ஹிஜாப் பிரச்சினை எழுந்த மேலூர் 8வது வார்டில் பாஜக 10 ஓட்டுகள் பெற்றுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக, பாஜக, மநீம, நாதக, விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. தற்போது உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக மதுரை, மேலூர் நகராட்சியில் 8வது வார்டு வாக்குசாவடியில் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜன் பிரச்சினை செய்ததால் வெளியேற்றப்பட்டார். இந்த வார்டின் வாக்கு எண்ணிக்கை தற்போது வெளியாகியுள்ள நிலையில் அதில் பாஜக 10 ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளது. அந்த வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.