ஆ.ராசா சொன்ன அந்த வார்த்தை.. திமுக குடும்பதிற்கும் பொருந்துமா? – எடப்பாடியார் கேள்வி!
சமீபத்தில் இந்து மதம் குறித்து ஆ.ராசா கூறிய கருத்துகள் திமுக தலைவர் குடும்பத்திற்கும் பொருந்துமா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்து மதம் குறித்து திமுக எம்.பி ஆ.ராசா பேசிய வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சைக்கு உரியதாக ஆனது. ஆ.ராசாவின் இந்து மதம் குறித்த கருத்துகள் திட்டமிட்டே இந்துக்களை அவமதிக்கும் நோக்கில் பேசப்படுவதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த சர்ச்சை குறித்து சென்னை வடபழனியில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி “இந்துக்கள் குறித்து திமுக எம்.பி ஆ.ராசா சொல்லக்கூடாத, கீழ்தரமான வார்த்தைகளை கூறியுள்ளார். இந்துக்கள் குறித்து அவர் பேசியுள்ள இந்த கீழ்தரமான வார்த்தைகள் நாட்டு மக்களுக்கு பொருந்துமா? அல்லது திமுக தலைவர் குடும்பத்திற்கு பொருந்துமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.