நானே வருவேன் திரைப்படத்தின் அப்டேட் கொடுத்த செல்வராகவன் !
தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் பற்றிய முக்கிய அப்டேட் வெளியிட்டுள்ளார் இயக்குனர் செல்வராகவன்.
செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது . இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படும் நிலையில், படத்தின் முக்கிய கேடக்டரில் இயக்குனர் செல்வராகவனும் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான வீரா சூரா பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. இது சம்மந்தமான போஸ்டரில் படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நானே வருவேன் படத்தின் புதிய அப்டேட்டை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும், செல்வராகவனும் வெளியிட்டனர்.
செல்வராகவன் தன் டுவிட்டர் பக்கத்தில், நானே வருவேன் படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் மேஸ்ட்ரோ யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றும்போது எனத் தெரிவித்து, புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.