திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2022 (08:31 IST)

“என் அடுத்த படம் இந்த ஜானர்தான்…” ஷூட்டிங் எப்போ?... ராஜமௌலி கொடுத்த அப்டேட்!

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ராஜமௌலி இதுவரை தொட்டதெல்லாம் ஹிட்தான். அதுபோல தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் எல்லோருக்கும் அவர் ஹிட் கொடுத்துவிட்டார். இன்னும் மகேஷ் பாபுவோடு மட்டும் இணையவில்லை. இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு இருவரும் இணைய இருக்கின்றனர். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமையும் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது ராஜமௌலி பாரிஸில் உள்ள Unit Image - 3D Animation Films & Visual Effects நிறுவனத்துக்கு சென்று, அதன் உரிமையாளர்களை சந்தித்துள்ளார். மேலும் இதுகுறித்த அவரது பதிவில் “சில அற்புதமான வேலைகளை நாம் ஒன்றிணைந்து செய்யப்போகிறோம்” எனப் பதிவிட்டுள்ளார். இதனால் ராஜமௌலியின் அடுத்த படத்துக்கான வேலைகள் அங்கு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் டொரோண்டா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட அவர் “மகேஷ் பாபுவோடு நான் இணையும் திரைப்படம் ஆக்‌ஷன் படமாக இருக்கும். படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்கும்” எனக் கூறியுள்ளார்.