1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 21 ஜனவரி 2023 (11:23 IST)

சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் திடீர் மாற்றம்: முழு விபரங்கள்!

metro rail
தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் திடீரென ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் விம்கோ நகர் முதல் விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில்கள், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை செல்லும் மெட்ரோ ரயில்கள் ஆறு நிமிட இடைவேளையில் இயக்கப்படுகிறது என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran