1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 பிப்ரவரி 2026 (19:56 IST)

ஆனந்த் அம்பானி வாங்கியுள்ள தங்க கார்!.. எவ்வளவு கோடி தெரியுமா?!...

anant ambani
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி. சில வருடங்களுக்கு முன்பு இவரின் திருமணம் நடந்த போது இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள் பலரும் இதில் கலந்து கொண்டார்கள். பல கோடிகள் செலவு செய்து இந்த திருமணம் நடைபெற்றது.

ஒருபக்கம் ஆனந்த் அம்பானி ஆரம்பமான பொருட்களை வாங்குவது தொடர்பான செய்திகள் தொடர்ந்து ஊடகங்களில் வெளியாகி வருகிறது. உலக கால்பந்து விளையாட்டு வீரர் மெஸ்ஸி சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்தபோது அவருக்கு ஆனந்த் அம்பானி 10.9 கோடி மதிப்புள்ள ஒரு ஆடம்பர வாட்ச்சை பரிசளித்தார், அப்போது இது பரபரப்பாக பேசப்பட்டது.

அதேபோல் 12.5 கோடி மதிப்புள்ள பிரத்யேக வாட்ச் ஒன்றும் ஆனந்த் அம்பானிக்காக உருவாக்கப்பட்டது. இது தொடர்பான செய்திகளும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில், ஆனந்த் அம்பானி சமீபத்தில் 10.8 கோடி மதிப்புள்ள ஆடம்பர கார் ஒன்றை வாங்கியிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அந்த காரில் தங்க அலங்காரம் செய்யப்பட்ட வெளிப்பூச்சி மற்றும் குண்டு தாக்குதலை தாங்கும் புல்லட் புரூப், 800 HP திறன் கொண்ட ஒரு டேங்க் என பல அம்சங்கள் இருக்கிறது.. இதன் மொத்த விலை 10.8 கோடி என சொல்லப்படுகிறது.