திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 19 ஜனவரி 2023 (22:25 IST)

பிக்பாஸ் முகேன் ராவ் நடிக்கும் புதிய படம்: சென்னையில் பூஜை

mugen rao
பிக்பாஸ் முகேன் ராவ் நடிக்கும் புதிய படம்: சென்னையில் பூஜை
பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முகேன் ராவ் 'வேலன்' திரைப்படத்தில் நடித்திருக்கும் நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. 
 
டி.ஆர்.பாலா தயாரிப்ப்பில் கணேஷ் சந்திரசேகரன் இசையமைப்பில் தீபக் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜின்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 
 
இந்த படத்தில் முகேன் ராவ், பவ்யா திரிகா ஆகிய இருவரும் நாயகன், நாயகிகளாக ல் நடிக்கின்றனர். 
 
மேலும் இந்த படத்தில் பால சரவணன், இமான் அண்ணாச்சி, விஜய் ஜார்ஜ், வடிவுக்கரசி, வினோதினி, நந்து ஆனந்த், ரித்விக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva