1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (08:54 IST)

வைகோ எம்பி பதவிக்கு ஆபத்தா? இன்றைய தீர்ப்பில் தெரிய வரும்!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
 
 
மதிமுக கட்சியை உடைக்க, தமிழக முதல்வர் கருணாநிதி முயற்சி செய்வதாக கடந்த 2006ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர், மன்மோகன் சிங் அவர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் ஒன்றை எழுதினார். இந்த கடிதத்தின் அடிப்படையில், அப்போதைய திமுக அரசு சார்பில், வைகோ மீது அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு பின்னர் சென்னையில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது
 
 
இந்த வழக்கில் இருதரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் ஆகஸ்ட் 26ம் தேதி, தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் வைகோ  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்ததால் அவரால் ஆஜராக முடியவில்லை. 
இதையடுத்து, திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தீர்பை பொருத்தே வைகோவின் மாநிலங்களை எம்பி பதவிக்கு ஆபத்தா? இல்லையா? என்பது தெரிய வரும் என கூறப்படுகிறது