ஸ்டாலின் ரகசிய பயணமாக வெளிநாடு சென்றது ஏன் ? கராத்தே தியாகராஜன் கேள்வி ?

karate thiagarajan
Last Updated: வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (19:42 IST)
தமிழகத்திற்கு முதலீடு வாய்ப்புகளை பெற்றுவருவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம் செய்துள்ளார். முதல்வரின் வெளிநாடு பயணத்திற்கு எதிர்கட்சி தலைவர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கடும் விமர்சனங்களை தெரிவித்தார்.
இதற்கு அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கராத்தே தியாகராகன் ஸ்டாலினுக்கு ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
 
அதில், கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி, தனது நண்பருடன்  தாய்லாந்து பாங்காங்கிற்கு பயணம் மேற்கொண்டது ஏன்?  என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
stalin
மேலும் அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, மத்திய அனுமதி பெறாமல், முக்கியமாக அப்போதைய முதல்வர் அவரது தந்தை கருணாநிதிக்கு இந்த விஷயம் தெரியாது. பின்னர் போலீஸ் மூலம்தான் அவர் இதை அறிந்துகொண்டார். பெற்ற தந்தையிடம் சொல்லாமல் ஏன் தாய்லாந்து போனீர்கள் என கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவம் திமுக - காங்கிரஸ் கட்சிகள் இடையே பெரும் அதிப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதில் மேலும் படிக்கவும் :