செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 மே 2024 (12:01 IST)

சென்னை சென்ட்ரல் அருகே தபால் நிலைய மேற்கூரை இடிந்து விபத்து.. ஊழியர்கள் படுகாயம்..!

சென்னை சென்ட்ரல் அருகே தபால் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தபால் நிலைய ஊழியர்கள் படுகாயம் அடைந்ததாகவும் இதனை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அல்லிகுப்பன்குளம் தபால் நிலையத்தின் மேற்கூரை இன்று இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் தபால் நிலைய ஊழியர்கள் ரகுபதி மற்றும் சிவா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்துள்ளதாகவும் இதனை அடுத்து சக ஊழியர்கள் அவர்களை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
 திடீரென தபால் நிலையம் மேற்கூரை இடிந்து விழுந்ததால் தபால் நிலைய ஊழியர்கள் மற்றும் தபால் நிலையத்திற்கு வந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
 
Edited by Mahendran