வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (10:58 IST)

பதவிக்காக புத்தி கெட்டு அலையாத... தமிழிசை டிவிட்டால் கடுப்பில் நெட்டிசன்கள்!

பியூஷ் மானுஷ் பாஜக அலுவலகத்தில் தாக்கப்பட்டது தொடர்பாக தமிழிசை போட்டுள்ள டிவிட்டை கண்டு இணையவாசிகள் கடுப்பாகியுள்ளனர். 
 
சேலத்தை சேர்ந்த பியூஷ் மானுஷ், சேலம் பாஜக அலுவகம் சென்று அங்கிருந்த தொண்டர்களிடம் காஷ்மீர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் கடுப்பான தொண்டர்கள் பியூஷ் மானுஷூக்கு செருப்பு மாலை அணிவித்து, நீ ராஜஸ்தானுக்கே போ என்று கோஷமிட்டனர். 
 
அதற்கு பின்னர் பியூஷ் மானுஷ் காஷ்மீர் பிரச்சனை குறித்து கேள்வி கேட்டுக்கொண்டே இருந்ததால் பியூஷ் மானுஷை பாஜகவினர் தாக்க தொடங்கினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் முக ஸ்டாலின், சேலம் பாஜக அலுவலகத்தில் பியூஷ் மானுஷ் தாக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்தின் கழுத்தை அறுக்கும் இத்தகைய வன்செயலை அறவழியில் வேரறுப்போம் என்றும் கூறியுள்ளார்.
 
இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அடுத்தகட்சி அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து வரம்புமீறி கலாட்டா காலித்தனம் செய்வதுதான் ஜனநாயகமா? இதுதான் சமூக செயல்பாடா? சமூக அமைதி சீர்குலைப்பா? சமூக ஆர்வலர் போர்வையில் வீண் விளம்பரம் தேட வரும் அர்பன் நக்சலைட்களை அடையாளம் காட்டுவோம்! என பதிவிட்டுள்ளார். 
இந்த டிவிட்டை பார்த்து கடுப்பான இணையவாசிகள், தமிழிசையை சகட்டு மேனிக்கு திட்டி வருகின்றனர். அவற்றில் சில கமெண்டுக்கள் பின்வருமாறு... 
 
நாலு ரவுடி ஒக்கார்ந்து இருக்கிற இடம் தான் கட்சி அலுவலகமா? ஏன் உங்க ராம் கோபாலன் அறிவாலயத்துக்கு போய், கலைஞர்ட கீதை குடுக்கலயா? போம்மா அந்தாண்ட.
 
என்ன நடந்தது என்பதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது.. பாசிச பாஜக ஒழிக
 
அப்ப யார் வந்தாலும் அடிப்போம்னு சொல்ல வர்றீங்க. புத்தியோடு பேசுக்கா பதவிக்காக புத்தி கெட்டு அலையாத
 
அவரவர் எதிர்ப்பை தெரிவிக்கும் உரிமை யாருக்கும் உண்டு. நீ தலைவரா இருக்கும் வரை கட்சி வெற்றி பெறாது.
 
கேள்வி கேட்டது காலித்தனமா? உங்களு பாசிசவாதிகள் என்று சொல்லுவதில் தவறில்லை