1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 மே 2024 (12:11 IST)

இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை தொடங்கிய எலான் மஸ்க்.. இந்தியாவில் எப்போது?

இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் இணையதள சேவையை எலான் மாஸ்க் வழங்கி வைத்த நிலையில் இந்தியாவில் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் வசிக்கும் மக்கள் பயன்படும் வகையில் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய சேவையை எலான் மஸ்க் நேற்று தொடங்கி வைத்தார்.   இதற்காக அவர் நேற்று இந்தோனேஷியா சென்ற நிலையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை பிரமாண்டமாக தொடங்கி வைக்கப்பட்டது.

 இதன் காரணமாக பல ஆயிரம் தீவு பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள் என்றும் அதிலும் அதிவேக இணையதள சேவையை அந்த பகுதி மக்கள் பயன்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது .

இது குறித்து எலான் மஸ்க் கூறிய போது தொலைதூர மருத்துவ உதவிகளுக்கு இந்த சேவை உதவும் என்றும் இணையதள கல்வி பரவும் நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

 இந்த நிலையில் இந்தியாவில் ஸ்டார்லிங் சேவை எப்போது என்று எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் விரைவில் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஸ்டார்லிங்க் சேவை நடைமுறைக்கு வந்தால் செல்போன் சிக்னல் கோபுரங்கள் மூலம் செயல்பட்டு வரும் நெட்வொர்க் நிறுவனங்கள் அனைத்தும் வீழ்ச்சி அடையும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Mahendran