அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்க சொன்ன திமுக?!.. அதிர்ச்சியடைந்த கூட்டணி கட்சிகள்!..

பாலகிருஷ்ணன்
சனி, 9 மே 2026 (09:13 IST)
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை தவெகவுக்கு கிடைக்கவில்லை என தெரிந்தவுடன் பல்வேறு யூகங்களும், வதந்திகளும் பரப்பப்பட்டன. அதில் ஒன்றுதான் அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு கொடுப்பதாக வெளியான செய்தி.. பல முக்கிய வடமாநில ஊடகங்கள் கூட இந்த செய்தியை வெளியிட்டன. அதாவது, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவது.. திமுக வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பது என முடிவெடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது..

விஜய் ஆட்சி அமைக்க முடியாமல் போனால் இதுதான் நடக்கப்போகிறது என பலரும் பேசினார்கள். ஆனால் ‘பல வருடங்களாக கீரியும் பாம்புமாக மோதி வந்த அதிமுக - திமுக  எப்படி ஒன்றாக சேர்ந்து ஆட்சி அமைப்பார்கள்?’ என மக்கள் மனதில் கேள்வி எழுந்தது. அப்படி நடந்தால் அது விஜய்க்குதான் சாதகமாக அமையும் என்று பலரும் பேசினார்கள்...

ஒருபக்கம் இரண்டு நாட்களில் நல்ல செய்தி வரும் என எடப்பாடி பழனிச்சாமி அதிமுக எம்.எல்.எக்களிடம் கூறினார்.. மேலும், அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டனர்.. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவார் என தம்பிதுரை பேட்டி கொடுத்தார்.. ஒரு பக்கம் திமுக தலைவர் ஸ்டாலின் திமுக எம்எல்ஏக்கள் அழைத்து ‘கட்சி என்ன முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்பட வேண்டும்’ என கையெழுத்து வாங்கினார். இதையெல்லாம் பார்க்கும் போது வெளியான செய்தி உண்மையாகிவிடும் என பலரும் நினைத்தனர்..

ஆனால் திமுக கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். இந்நிலையில்தான், ஒரு முக்கிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது.. திமுக தனது கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளை அழைத்து அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பதாக முடிவு செய்திருக்கிறோம்.. நீங்கள் வெளியிலிருந்து ஆதரவு கொடுங்கள் என கேட்டதாக தெரிகிறது.  அதைக் கேட்டு அவர் அதிர்ச்சியடைந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுக ஆட்சியென்றால் அது பாஜகவின் ஆட்சிதான். அதை அனுமதிக்க முடியாது’ என சொல்லி திமுகவின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

எல்லாம் காட்டு

நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..

ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments