செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (19:47 IST)

திமுக கூட்டணி அமோக வெற்றி: அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

திமுக கூட்டணி அமோக வெற்றி: அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை
திமுக கூட்டணி அமோக வெற்றி: அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக கைப்பற்றிக் கொள்வது என்பதும் வரலாறு காணாத வெற்றியை திமுக தலைவர் மு க ஸ்டாலின் அக்கட்சிக்கு பெற்று தந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது
 
 இந்த நிலையில் திமுகவின் அமோக வெற்றியை அடுத்து சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் சென்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்
 
அப்போது அவருடன் அமைச்சர் துரைமுருகன், உதயநிதி, ஆ ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது