செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (19:42 IST)

எஸ்.பி.வேலுமணியின் சொந்த வார்டில் திமுக வெற்றி!

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் சொந்த தொகுதியில் திமுக வெற்றி பெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கோவை மாநகராட்சியில் உள்ள 92 வது வார்டில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீடு உள்ளது. இந்த 92 வது வார்டில் திமுகவை சேர்ந்த வெற்றிச்செல்வன் வெற்றி பெற்றுள்ளார். அவர் அதிமுக வேட்பாளரை விட 456 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
முன்னாள் அமைச்சர் வேலுமணி கோவையில் அதிமுக வெற்றிக்காக தீவிர பிரச்சாரம் செய்த நிலையில் அவரது வீடு இருக்கும் சொந்த வார்டிலேயே திமுக வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.