சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ பாஜகவில் இணைகிறாரா? திமுக தலைமை அதிர்ச்சி!
கடந்த சில நாட்களாகவே திரையுலகைச் சேர்ந்தவர்களும் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களும் பாஜகவில் இணையும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டதில் இருந்து மாற்று கட்சி தலைவர்கள் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது
மேலும் திமுக அதிமுகவில் உள்ள ஒருசில பிரபலங்கலூம், வேறு கட்சியில் உள்ள பிரபலங்களும் பாஜகவில் விரைவில் இணைய இருப்பதாகவும் தேர்தல் நெருங்குவதற்குள் பலர் பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு.க செல்வம் அவர்கள் பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன. இந்த செய்தி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் திமுக தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தன்னுடைய கட்சி எம்எல்ஏ ஒருவர் பாஜகவில் இணைய இருப்பதாக வெளிவந்துள்ள செய்தியை அறிந்து திமுக தலைமை அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது