1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 2 மே 2021 (10:20 IST)

118 தொகுதிகளில் முன்னிலை பெற்ற திமுக... பெரும்பாண்மையா ஆட்சி அமைஞ்சுடும் போல!

நடந்து வரும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் திமுக 118 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தற்போது முதல் சுற்று முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் வெற்றிக்கு தேவையான 118 தொகுதிகளில் திமுக முன்னிலைப் பெற்றுள்ளது. இது தொடர்ந்தால் திமுக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். கடந்த 2006- 2011 தேர்தலில் வெற்றி பெற்ற திமுக காங்கிரஸ் கூட்டணியோடு ஆட்சி அமைத்து இருந்தது. ஆனால் இது முதல் சுற்று முடிவுகள்தான் என்பதால் இன்னும் மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது.