1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Distributor association letter to anbumani ramadoss

சூர்யா மீதான விமர்சனத்தை தவிர்க்க வேண்டும்! – அன்புமணிக்கு கோரிக்கை!

Tamilnadu
ஜெய் பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா மீதான விமர்சனத்தை தவிர்க்குமாறு அன்புமணிக்கு திரைப்பட வர்த்தக சபை கேட்டுக் கொண்டுள்ளது.

நடிகர் சூர்யா நடித்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பலரது பாராட்டுகளை பெற்றது.

அதேசமயம் இந்த படத்தின் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் சமூக வலைதளங்களில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில் பாமக எம்.பி அன்புமணிக்கு கோரிக்கை கடிதம் விடுத்துள்ள திரைப்பட வர்த்தக சபை, ஜெய்பீம் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் தொழில்நுட்ப கலைஞர்களால் எடுக்கப்பட்டுள்ளது எனும்போது இதற்கு சூர்யாவை பொறுப்பாக்குவது சரியல்ல என்று கூறியுள்ளதுடன், சூர்யா மீதான விமர்சனத்தை தவிர்க்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பு? ஆசை காட்டி மோசடி! – யூட்யூப் சேனல் மீது புகார்!