செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated: திங்கள், 19 செப்டம்பர் 2022 (15:18 IST)

கடலூரில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை!

வீட்டில் பெற்றோருக்குள் ஏற்பட்ட தகராறால்  மனம் உடைந்த மாணவி துக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீக காலமாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தற்கொலை செய்து வரும் சம்பவம் அதிகரித்து வரும்  நிலையில் மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

கடலூர் மாவட்டம் புவனகிர் அருகே பரங்கிப்பேட்டை அகரம் பெரியகோவில் தெருவில் வசித்து வருப்வர் ரத்தினம். இவர் அங்குள்ள பகுதியில் கட்டிடத்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவிக்கும் இவருக்கும் இடையே வீட்டில் தகராறு இருந்த வந்துள்ளது.

இதனால், மனமுடைந்த  மாணவி இந்தத் தம்பதியரின் மகள் ருத்ராதேவி(17) வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.  இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.