1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. College student hangs herself

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

College student hangs herself
நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள கல்லடி சிதம்பரபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி தனது பெற்றோர் கல்லூரி கட்டண செலுத்த முடியாததால்  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள கல்லடி சிதம்பரபுரம் பகுதியில் வசிப்பவர் முத்துக்குமார் (53). இவருக்கு 2 மகள்களும், 1 மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், இவரது மகள் பொன்னாக்கடியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி பட்டப்படிப்பில் சேர்ந்துள்ள நிலையில்,இதற்கான கல்லூரி கட்டணம் ரூ.12 ஆயிரத்தை முத்துக்குமார் இரண்டு தவணைகளாகச் செலுத்தியதாகத் தெரிகிறது. குடும்ப சூழ் நிலையில் சிரமத்திற்கு இடையில்  மகள் படிப்பிற்கு கல்விக் கட்டண செலுத்துவதை எண்ணி மாணவி மனவேதனை அடைந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை தன் வீட்டில் அறைக்கதவை மூடி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதைப் பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாணவி இறப்பதற்கு முன்  ஒரு கடிதம் எழுதிவைத்துள்ளார். அதில், தனது படிப்பு செலவுக்குப் பெற்றோர் செலவுக்காக சிரமப்படுவதால் தற்கொலை செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
பாஜக ஒட்டிய பிரதமர் படத்தின் மீது கருப்பு ஸ்ப்ரே: தந்தை திராவிடர் கழகத்தினரால் பரபரப்பு