1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified சனி, 30 ஜூலை 2022 (21:38 IST)

பல்கலைக் கழக மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மவுலானா ஆசாத் தேசிய தொழில் நுட்பக் கழகத்தின் வளாகத்தில் உள்ள மரத்தில் ஒரு பொறியியல் மாணவர் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மவுலானா ஆசாத் தேசிய தொழில் நுட்பக் கழகத்தில், 4 ஆம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர் உத்தேஷ்யா அஹிர்வார் என்பவர் பல்கலைக்கழக்கத்தின் விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மாணவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனிப்பிவைத்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.