1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 21 ஜனவரி 2022 (13:14 IST)

கொரோனா காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ரத்தா?

ஊரக உள்ளாட்சி தேர்தல் போன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உறுதி. 

 
சமீபத்தில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 
 
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் உயர்நீதிமன்றத்தில் தகவலளித்தார். 
 
அப்போது அவர் ஊரக உள்ளாட்சி தேர்தல் போன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படும் என உறுதியளித்தார். இதன் பின்னர் தேர்தலுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுத்து வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.