புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 13 ஜனவரி 2022 (09:33 IST)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சற்று முன்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
 
தமிழகத்தில் சமீபத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்கு உண்டான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வரும் நிலையில் சற்று முன்னர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்
 
இதுகுறித்து அவர் தனடு டுவிட்டரில், ‘பல்லாண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்னைகளுடன் தமிழக நகரங்கள்  அல்லாடுகின்றன. இவைகளைத் தீர்க்கும் தகுதியும் திறனும் கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறேன். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாகை சூட என் வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்