சென்னை & தாம்பரம் மாநகராட்சி - பெண்களுக்கு ஒதுக்கீடு!
சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கான தேர்தலில் பட்டியலினத்தவருக்கு 32 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. எனவே தமிழக அரசியல் கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் பட்டியலினப் பெண்கள் மட்டுமே போட்டியிடும் வகையில் சென்னை மாநகராட்சியும், தாம்பரம் மாநகராட்சியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கான தேர்தலில் 32 வார்டுகளில் 16 வார்டுகள் பட்டியலின பெண்களுக்கும், 16 வார்டுகள் பட்டியலின பொதுப்பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 84 வார்டுகள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட வார்டுகளில் பெண்கள் போட்டியிடக்கூடிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.