1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 12 ஜனவரி 2022 (10:30 IST)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிப்பா?

தமிழகத்தில் சமீபத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் விரைவில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது
 
இன்று மாலை 04.30 மணி மற்றும் 6 மணி என இரண்டு கட்டமாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளது. இந்த ஆலோசனைக்கு பின்னர் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அனேகமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.