1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 8 ஜூலை 2021 (21:25 IST)

இன்று உதயநிதியிடம் நிவாரண நிதி வழங்கியவர்கள் யார் யார்?

இன்று உதயநிதியிடம் நிவாரண நிதி வழங்கியவர்கள் யார் யார்? என்பது குறித்து அவரே தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: 
 
கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு, Raja Dental College & Hospital சார்பில் அதன் தலைவர் Dr.ஜாகோப் ராஜா அவர்கள்  ரூ.5 லட்சத்திற்கான காசோலையை இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்
 
திருநெல்வேலி மாவட்டம், திருத்து கிராமத்தை சேர்ந்த பரமசிவ ஐயப்பன் அவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.2 லட்சத்திற்கான காசோலையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
 
பெரம்பூர் தெற்கு பகுதி இளைஞரணி அமைப்பாளர் சகோதரர் சுரேஷ் அவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையை  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.