ஒரு கோடி சப்ஸ்க்ரைபர் பெற்ற யூட்யூப் சேனல்! முதல்வரிடம் நிவாரண நிதி!

MK Stalin
Prasanth Karthick| Last Modified திங்கள், 5 ஜூலை 2021 (11:41 IST)
தமிழகத்தில் முதன்முறையாக 1 கோடி சப்ஸ்க்ரைபர்களை பெற்ற வில்லேஜ் குக்கிங் சேனல் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளனர்.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவரான பெரியதம்பி தாத்தாவும், சில இளைஞர்களும் சேர்ந்து கிராமத்து சமையல் செய்யும் யூட்யூப் சேனல் ஒன்றை கடந்த 2018ம் ஆண்டு தொடங்கினர். அவர்களுடைய நகைச்சுவையான பேச்சும், பாரம்பரிய கிராம சமையலும் பலரை ஈர்க்கவே கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் 1 கோடி சப்ஸ்க்ரைபரை பெற்ற முதல் யூட்யூப் சேனலாக டைமண்ட் கேடயத்தை பெற்றுள்ளது வில்லேஜ் குக்கிங் சேனல். சமீபத்தில் தமிழகம் வந்த ராகுல் காந்தி இவர்களுடன் அவர்கள் கிராமத்திலேயே உணவருந்தியது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஒரு கோடி சப்ஸ்க்ரைபரை பிடித்து சாதனை படைத்திருக்கும் வில்லேஜ் குக்கிங் சேனலை சேர்ந்தவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்கள் யூட்யூப் வருமானத்திலிருந்து ரூ.10 லட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக அவரிடம் அளித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :