திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 5 ஜூலை 2021 (09:00 IST)

இரண்டு ஆண்டுகள் நிறைவு: கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய உதயநிதி!

திமுக இளைஞர் அணி செயலாளராக பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி நினைவிடத்தில் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மரியாதை செலுத்தி உள்ளார் 
 
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் திமுக இளைஞரணி சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது என்பதும் பல சமூக நலத் திட்டங்கள் கொண்டு வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்றுடன் இரண்டு ஆண்டுகள் திமுக இளைஞரணி செயலாளராக பதவி ஏற்று நிறைவடைந்ததை அடுத்து சென்னையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தி.மு.கழகத்தின் இளைஞரணி செயலாளராக கடமையாற்றும் வாய்ப்பை கழக தலைவர் அவர்கள் தந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்து, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் இன்று மரியாதை செய்தேன். கலைஞர் வழியில், தலைவர் வழிகாட்டலில் அயராது உழைப்போம்.  நன்றி.