1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today people give fund to udhayanidhi

உதயநிதி ஸ்டாலினிடம் இன்று நிதிகொடுத்தவர்களின் விபரங்கள்!

உதயநிதி
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பல்வேறு தரப்பினர் அரசுக்கு உதவி செய்யும் வகையில் நிதி கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினிடம் இன்று நிதி கொடுத்தவர்களை விபரம் குறித்து அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து உதயநிதி கூறியிருப்பதாவது:
 
ராயபுரம் ஶ்ரீதர் - ஜெயசுதா தம்பதியின் மகன் கவியமுதன் கொரோனா தடுப்புக்காக தன் சேமிப்பு ரூ.3,000-த்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு என்னிடம் வழங்கினார். வீட்டில் 4 பேருக்கு தொற்று ஏற்படவே, அப்படியொரு நிலை யாருக்கும் வரக்கூடாது என நிதியளித்த தம்பிக்கு நன்றி.
 
கொரோனா தடுப்புக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரணநிதிக்கு பார்வை மாற்றுத்திறனுடைய கல்லூரி மாணவர்கள் &பட்டதாரிகள் சங்கம் சார்பில் ரூ.1,10,500-க்கான வரைவோலையை Dr.ராஜா, மணிக்கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் என்னிடம் வழங்கினர்.சகோதரர்களின் பொறுப்புக்கும்-பேருதவிக்கும் நன்றி
 
 
அடுத்த கட்டுரையில்
கலைஞர் தொலைக்காட்சி ஓட்டுனருக்கு திருமணம்: உதயநிதி வாழ்த்து!