திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 29 ஜனவரி 2024 (12:47 IST)

பட்டமளிப்பு விழா.. புறக்கணித்த அமைச்சர்.! ஆளுநர் பங்கேற்பு.!!

governor
அழகப்பா பல்கலைகழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை உயர் கல்விதுறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் புறக்கணித்த நிலையில், ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்று 348 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.
 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் 34 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர் எம் ரவி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கலந்து கொண்டு பட்டம் வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
 
பல்வேறு துறைகளில் நேரடியாகவும் தொலைநிலை கல்வியில் பயின்ற மொத்தம் 40 ஆயிரத்து 414 மாணவ மாணவியர்கள் பட்டங்கள் வழங்கப்படுகிறது.  இதில் 164 பேர் முனைவர் பட்டமும், 184 பேர் தரவரிசை பெற்றவர்கள் என மாணவ மாணவியர்கள் 348 பேருக்கு ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.


இந்த நிகழ்ச்சிக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வரவில்லை.  விழா அழைப்பிதழில் அமைச்சரின் பெயர் இடம் பெற்று இருந்த நிலையில் விழாவை அமைச்சர் புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.