ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 17 அக்டோபர் 2023 (13:23 IST)

குடியரசு தலைவர் 2 நாள் பயணமாக தமிழகம் வருகை!

இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் என தகவல் வெளியாகிறது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு  நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார்.

இந்த  நிலையில், சென்னையை அடுத்த உத்தண்டியில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வரும் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தமிழ்நாடு வருகிறார் என தகவல் வெளியாகிறது.