ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 27 அக்டோபர் 2023 (19:37 IST)

குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுடன் லதா ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்திப்பு

ladha rajinikanth
சென்னையில் உள்ள கடல்சார் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர்  திரெளபதி முர்மு  தமிழகம் வருகை புரிந்துள்ளார்.

இதற்கு நேற்று மாலை விமானப்படை தனி விமானம் முலம் சென்னை வந்தார்.

தமிழக வந்த ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்களிடம் முதல்வர் மு.க ஸ்டாலின்  தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு மேலும் தாமதம் இன்றி உடனடியாக ஒப்புதல் அளித்து தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காத்திட வேண்டும் என்று நேரில் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த  நிலையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுடன் லதா ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர்  சந்தித்துள்ளனர். இவர்கள் எடுத்த புகைப்படம் பரவலாகி வருகிறது.