1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 4 அக்டோபர் 2023 (12:05 IST)

புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதில் சிக்கல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

MK Stalin
தமிழகத்தில் இனிய புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதில் சிக்கல் எழுந்து உள்ள நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
 
புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்"
 
தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பினால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
 
இதுபோன்ற கட்டுப்பாடு விதிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் புதிய மருத்துவமனைகளும், புதிய முதலீடுகளும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும்
 
மாநில அரசுகளுடன் உரிய ஆலோசனைகளை மேற்கொள்ள தேவையான அறிவுரைகளை மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு வழங்கிட வேண்டும் என முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran