1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 4 அக்டோபர் 2023 (07:58 IST)

தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டுள்ளது: பிரதமர் திடுக்கிடும் குற்றச்சாட்டு..!

PM Modi
தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துக்கள் மாநில அரசின் உடந்தையுடன் அபகரிக்கப்பட்டுள்ளது என தெலங்கானாவில் நடத்த பொதுகூட்டத்தில் பிரதமர் மோடி திடுக்கிடும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
 
தெலங்கானாவில் நடத்த பொதுகூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று உரையாடினார். அப்போது அவர் தென் மாநிலங்களில் கோவில்கள் அபகரிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுகிறது என்றும், சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்களை அவர்கள் ஒருபோதும் தொடமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
 
குறிப்பாக தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டுள்ளது என பிரதமர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் ஒட்டுமொத்த நாடும் காங்கிரஸ் கட்சியை புறக்கணித்து விட்டது என்றும், மீண்டும் பாஜக தான் ஆட்சிக்கு வரும் என்றும் அவர் பேசினார்.
 
Edited by Siva