வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 ஜனவரி 2021 (14:26 IST)

பள்ளிகளே திறக்கல.. திரையரங்குக்கு என்ன அனுமதி? – நீதிமன்றம் சரமாரி கேள்வி

தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத அனுமதி அளிக்கப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தமிழகத்தில் பொங்கலை முன்னிட்டு மாஸ்டர், ஈஸ்வரன் போன்ற படங்கள் வெளியாக உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் இந்த அனுமதியால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், இந்த அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் முதல் மத்திய அரசு வரை கருத்து தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தபோது கேள்வி எழுப்பிய நீதிபதிகள் “கொரோனாவால் பள்ளிகளே திறக்கப்படாத நிலையில் திரையரங்குகளில் எப்படி 100 சதவீதம் அனுமதி அளிக்க முடியும்” என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசிகள் கிடைத்து இயல்புநிலை திரும்பும் வரை அரசு அவசரப்படக்கூடாது என்று தெரிவித்த நீதிமன்றம் மதுரை கிளையில் உள்ள மற்றொரு திரையரங்க வழக்குடன் இதை இணைத்து ஒன்றாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.