திரையரங்குகளை திறக்க மாட்டோம் – பிலிம்சேம்பர்ஸ் கூட்டத்தில் முடிவு!

theatre
Last Modified வெள்ளி, 8 ஜனவரி 2021 (10:35 IST)

கேரளாவில் திரையரங்குகளை இப்போது திறக்கப் போவதில்லை என பிலிம்சேம்பர்ஸ் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் 50 சதவீத இருக்கைகளோடு திரையர்ங்குகளை ஜனவரி 5 ஆம் தேதி முதல் திறந்துகொள்ளலாம் என அம்மாநில அரசு உத்தரவிட்டது. ஆனால் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும், தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த காலத்தில், அதற்கு கணக்கிடப்பட்ட மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ள திரையரங்க உரிமையாளர்கள் திரையரங்குகளை இன்னும் திறக்கவில்லை.

இது சம்மந்தமாக நேற்று பில்ம் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் கேரளாவில் திரையரங்குகளை இப்போது திறப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளனர். இது சம்மந்தமாக அவர்கள் ’50 சதவீத இருக்கைகளோடு திறக்க சொல்வது மற்றும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி ஆகியவற்றை ஏற்க முடியாது. பொழுது போக்கு வரியும் வசூலிக்கப்பட கூடாது’ எனப் பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :