ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (12:19 IST)

அதிமுகவில் இணையும் பாஜக சிட்டிங் எம்எல்ஏக்கள்..! தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

amman arjun
பாஜக எம்எல்ஏக்கள் இரண்டு பேர் இன்று அதிமுகவில் இணையுள்ளதாக கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
 
அண்மையில் காங்கிரஸில்  எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி பாஜகவுக்கு தாவியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.  இந்நிலையில் பிரதமர் மோடி இன்று தமிழகம் வரும் நிலையில், அதிமுகவை சேர்ந்த பல முக்கிய நபர்கள்,  மோடி முன்னிலையில் பாஜகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனனும் பாஜகவில் இணைவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவில் இணைய போவதாக வெளியான தகவல் வதந்தி என்றும் இரண்டு பாஜக எம்எல்ஏக்கள் தான் இன்று அதிமுகவில் இணை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
 
வருகின்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் நாங்கள் வெல்வோம் எனவும்  பாஜக ஜெயித்தால் நான் அரசியலில் விட்டே விலகுகிறேன் எனவும் அம்மன் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

 
இந்நிலையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதி தமிழக பாஜகவில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணையப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியது.